இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த இசைக்கலைஞர்களுள் ஒருவரான லெலும் ரத்நாயக்க வாகன விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
இவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.