திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை நகரில் இருந்து பத்தனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் கொட்டகலை வூட்டன் பஸாரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதில் இழுத்து செல்லப்பட்டு பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானில் மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி எறியப்பட்டதுடன் மற்றய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கில்கள் வான் என்பன சேதமடைந்துள்ளன.
மோட்டார் சைக்கிலை செலுத்தியவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பத்தனை பொலிசார் தெரிவித்தனர். மேலும் மோட்டார் சைக்கில் சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு வானில் மோதி அதன் அடியில் சென்றுள்ளதால் வானுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவம் திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.