இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா ( Oxford Astra – Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலாவது டொஸ்கள் வைத்தியசாலையில் படையினருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொரோனா தடுப்பூசிகளை இன்று தொடக்கம் ஆறு வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றது.
சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு முதல் கட்டத்தில் இந்த தடுப்பூசிகளை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.