சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை வவுனியா ,மடுகந்த விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.
கெப்பிற்றிக்கொல்லாவை காட்டுப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மடுகந்த விஷேட அதிரடிபடையினரின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.வி. நிமால் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினரால் குறித்த பகுதியை சுற்றிவளைத்த போது கெப்பிற்றிக்கொலாவ பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன், மரத்தினை வெட்டுவதற்கு பயன்படும் இயந்திரத்தினையும் கைப்பற்றினர்.
இதேவேளை, அறுக்கப்பட்டு கடத்திச்செல்லப்படவிருந்த மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களையும், மரக்குற்றிகளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக கெப்பிற்றிக்கொல்லாவை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



















