கேரளாவில் திருமணமான 28 நாளில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இறந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாமியாரும் உயிரிழந்துள்ளார்.
சரத் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் ஆதிரா (24) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்காக சரத் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்தார்.
இந்த நிலையில் திருமணமான 28 நாட்களில் ஆதிரா கணவர் வீட்டின் கழிப்பறையில் இறந்து கிடந்தார்.
அவர் கத்தியால் தன்னுடைய கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அந்த சமயத்தில் ஆதிராவின் கணவர் வெளியில் சென்றிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
ஆனால் ஆதிரா தற்கொலை செய்யவில்லை, அவரை கொலை செய்துவிட்டனர் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் ஆதிரா இறந்த சில நாட்கள் கழித்து அவரின் மாமியாரான ஷாயமளா கோழிப்பண்ணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
மருமகள் உயிரிழந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஷாயமளா இம்முடிவை எடுத்ததாக தெரிகிறது.
ஏற்கனவே ஆதிரா தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் ஷாயமளா உயிரை மாய்த்து கொண்டது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.