தூக்குணாங்குருவி ஒன்று தனது கூட்டிற்குள் நுழையும் பாம்பை விடாமல் துரத்தி தனது முட்டையையும், அதன் குஞ்சையும் காப்பாற்றும் காணொளி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பாம்பு ஒன்று கூட்டிற்குள் நுழைய அவதானித்த நேரம், குருவிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாம்பை விடாமல் கொத்தி துரத்த முயன்றுள்ளது.
ஒரு கட்டத்தில் கூட்டிற்குள் தலையை நுழைத்த பாம்பினை குருவிகள் அனைத்தும் கொத்தி ஒருவழியாக வெளியேற்றியுள்ளது. இதில் தனது கூட்டினையும், கூட்டிற்குள் இருக்கும் முட்டையையும் காப்பாற்ற குருவி படாதபாடு பட்டுள்ளது.