கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல்வீரவன்ச அறைகூவல் விடுத்துள்ளதாக என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பது என தீர்மானித்தால் அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளிற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் முன்வரவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அடுத்தவாரம் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தால் தீர்க்ககரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்று அமைச்சர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவரின் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.