கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 1200 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையினர் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உதவி சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி வைததியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் கொவிட் 19 தடுப்பு ஊசிகள் வழங்கப்படுவதாகவும், 1200 பேருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தெடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.