இந்தியாவில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா எனப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேராவின் உதவியாளரினால் சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுக்கும் பிரிவினரால் குறித்த தகவல் வெளியிப்படுத்தப்பட்டுள்ளது.
3 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 21 கிராம ஐஸ் போதைப்பொருளுடன் முல்லேரியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
7 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நேற்றிரவு குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அங்கொட லொக்காவின் உதவியாளரான, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள க்ளேமன் குணரத்ன என்பவரால் குறித்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக இதன்போது தெரியவந்துள்ளது.