நாட்டில் கொவிட்-19 காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது.
நேற்றும் 8 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 27 ஆம் திகதி மரணித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து அவர் இரணவில சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் மரணித்தார்.
கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாணந்துறை பகுதியை சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 27 ஆம் திகதி மரணித்தார்.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணித்தார்.
கொவிட்-19 நியூமோனியா காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி பகுதியை சேர்ந்த 58 வயதான ஆண் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று முன்தினம் மரணித்தார்.
கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து அவர் முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மரணித்தார்.
கொவிட் நியூமோனியா மற்றும் மோசமடைந்த இதய நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது,
களுத்துறை பகுதியை சேர்ந்த 90 வயதான பெண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி மரணித்தார்.
கொவிட்-19 தொற்று காரணமாக மூளையில் ஏற்பட்ட குருதிபெருக்கத்தை அடுத்து அவர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண்ணொருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் மரணித்தார்.
கொவிட்-19 தொற்றால் இதயம் செயலிழந்தமை, மோசமடைந்த நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவர் கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்தியசாலையில் சிகிச்சை வந்த நிலையில் நேற்று மரணித்தார்.
நியூமோனியா மற்றும் குருதி விசமானமையால் அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதி 12 பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று மரணித்தார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.
குருதி விஷமாதலால் ஏற்பட்ட அலர்ச்சி, மற்றும் கொவிட் நியூமோனிய, இதயநோய் நிலமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினப்புரி பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவர் கொவிட்-19 தொற்றுறுதியானநிலையில் நேற்று முன்தினம் மரணித்தார்.
இரத்தினப்புரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நியூமோனியா, குருதி நஞ்சாதலால் ஏற்பட்ட அலர்ச்சி மற்றும் இதயநோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.