கனடாவில் பிறந்த பிரபல நடிகையும், கோடீஸ்வரியுமான பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளரை ஐந்தாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கனடிய – அமெரிக்க நடிகையான பமீலாவின் சொத்து மதிப்பு $12 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 52 வயதான பமீலா தனது மெய்க்காப்பாளராக இருந்த டேன் ஹேஹர்ஸ்டை மணந்துள்ளார்.ட்கடந்த டிசம்பர் மாதம் 24-ம் திகதி நெருங்கிய நண்பர்கள், சொந்தங்கள் மட்டும் கலந்துகொள்ள் கனடாவின் வான்கவர் தீவில் இந்தத் திருமணம் நடந்து முடிந்தது.
52 வயதான பமீலாவுக்கு இது ஐந்தாவது திருமணம். இவரது முதல் திருமணம் இசைக் கலைஞர் டாமி லீயுடன் நடந்தது. இவர்களுக்கு ப்ராண்டன் மற்றும் டைலன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
டாமி லீயைச் சந்தித்த 4 நாட்களில் பமீலா திருமணம் செய்துகொண்டது அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தற்போது பமீலா திருமணம் செய்திருக்கும் டேன் ஹேஹர்ஸ்ட், பமீலாவின் ஊரைச் சேர்ந்தவர்.
பமீலாவின் மகன்கள் ப்ராண்டன், டைலன் ஆகிய இருவரும் தங்கள் தாயின் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.