கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் ஒருவர், மற்றுமொரு பெண்ணுக்கு உதவ முயற்சித்து பணத்தை இழக்க நேரிட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணம் வுட்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த மாரியா பெதக்டாக் என்ற பெண்ணே இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார்.
இந்த பெண் சுமார் 14,000 டொலர்களை இழந்துள்ளார். டாக்ஸி மோசடியில் இந்த பெண் சிக்கி பணத்தை இழக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒருவர் டாக்ஸி கட்டணத்தை செலுத்த முடியாது அவதியற்றபோது தாம் அவருக்கு உதவியதாக தெரிவிக்கின்றார்.
பத்து டொலர் பயண கட்டணத்தை பணமாக செலுத்த முடியாது எனவும் அட்டை மூலம் செலுத்துவதற்கு உதவுமாறும் குறித்த பெண் கோரியுள்ளார்.
கருணை உள்ளம் கொண்ட மாரியா தனது வாங்கி அட்டையை வழங்கி கொடுப்பனவை மேற்கொண்டுள்ளார்.
அந்த நேரத்தில் குறித்த பெண் பத்து டொலர்களை மாரியாவிற்கு வழங்கியுள்ளார்.
பின்னர் சில நாட்களில் தனது வங்கி கணக்கில் இருந்து 14000 டொலர் அறவீடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாரிய அளவில் மோசடி இடம் பெற்றுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
டாக்ஸி மோசடிகள் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரையில் இந்த ஆண்டில் டாக்ஸி மோசடிகள் ஊடாக சுமார் 1.6 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாள்தோறும் இவ்வாறான டாக்ஸி மோசடிகள் இடம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் போதிய அளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




















