இந்தியாவில் திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரின் மனைவி மற்றும் மாமனாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் அந்திசக் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீம் (30) இவர் கல்லூரி பேராசிரியாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் பிராத்ததி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று பிரதீமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மரணம் மர்ம மரணமாக பொலிசாரால் கருதப்பட்டது.
இதனிடையில் பிரதீமின் பெற்றோர் பொலிசில் அளித்த புகாரில், பிரதீம் மனைவி பிராத்ததி நாங்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை, அடக்கமாக உடைகளை அணியாமல் மாடர்னாக உடை அணியவே விரும்பினார்.
கிராமத்தில் வளர்ந்த பிரதீமுக்கு மனைவியின் நவ நாகரிக நடவடிக்கைகள் அதிருப்தியை கொடுத்தது.
இது தொடர்பாக பிரதீம் – பிராத்ததி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதையடுத்தே மர்மமான முறையில் பிரதீம் இறந்திருக்கிறார்.
அவரை பிரதீம் தான் கொலை செய்திருக்கிறார் என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பிராத்ததி மற்றும் அவர் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரதீமின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியான பின்னர் இந்த சம்பவத்தில் முழு உண்மையும் வெளியாகும் என பொலிசார் கூறியுள்ளனர்.