அமெரிக்காவில் ஐந்து குழந்தைகள் உட்பட ஆறு பேரை சுட்டுக் கொன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணம் மஸ்கோஜியில் உள்ள ஒரு குடியிருப்பில், நேற்று அதிகாலை அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்தனர்.
குறித்த குடியிருப்பில் ஒரு ஆண் மற்றும் நான்கு குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர்.
குண்டு துளைத்த காயங்களுடன் இருந்த மற்றொரு குழந்தையும், மருத்துவமனையில் இறந்தது.
ஆறு பேரை சுட்டுக்கொன்ற 25 வயது இளைஞரை கைது செய்த பொலிசார், அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் அந்த குழந்தைகளுக்கு உறவினர் எனவும், சொந்த சகோதரரின் குடும்பத்தையே அவர் படுகொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் குழந்தைகளின் தாயார் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தின் போது மேலும் 3 சிறுவர்கள் அந்த குடியிருப்பில் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் காயங்களின்றி தப்பியதாக கூறப்படுகிறது.