தலஹேன, ஜெயா மவத்தைச் சேர்ந்த ‘சிவா’ என அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் மனைவியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிவா என அழைக்கப்படும் நந்தகுமார் சிவானந்தன் கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதற்காக பொலிசாரால் தேடப்பட்டவர். கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க, சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
44 வயதான பெண் சந்தேக நபர் 07 கிராம் மற்றும் 250 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒரு சொகுசு எஸ்யூவி, இரண்டு வேன்கள் மற்றும் ஒரு காரைக் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 50 மில்லியன் ரூபாவாகும்.
பிரான்சில் இருந்து போதைப்பொருள் கடத்தும் ‘ரூபன்’ மற்றும் இத்தாலியில் இருந்து போதைப்பொருள் கடத்தும் ‘குடு லாலா’ ஆகியோரின் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் உள்ளூர் செயற்பாட்டாளராக சிவா செயற்பட்டது தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த சிவா கடல் வழியைப் பயன்படுத்துகிறார் என்று பொலிசார் தெரிவித்தனர்.



















