இலங்கைக்குள் சமவுரிமை மற்றும் அமைதியை பாதுகாக்கும் வகையில் அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை இதற்கான அடிப்படையாக பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜெய்சங்கர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அதிகார பரவலாக்கல் மூலம் மாத்திரம் நிறைவேறும். அண்மையில் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது அந்நாட்டு தலைவர்களிடம் இதனை வலியுறுத்தியுள்ளேன்.
இலங்கையில் அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டத்திற்கு இந்தியா தனது முழுமையான உதவியை வழங்கும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.