ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும், அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, அவர்கள் வெளியிட்ட நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “இரண்டு தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களின் போது, பொதுத்துறை பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தனர்.
இந்தநிலையில், நாட்டின் முதுகெலும்புகளான அரச பணியாளர்களுக்கான, இந்த நிறைவேறாத இந்த வாக்குறுதிகளின் தாக்கம் குறித்து அவர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களை இரண்டு தலைவர்களும் தவறாக வழிநடத்துவது விரக்தியுக்கும் கொந்தளிப்பிற்கும் வழிவகுக்கும் என்றும் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.