ஐ.நா மனித உரிமைப்பேரவை உட்பட்ட அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களில் இருந்துவரும் அழுத்தத்தை சமாளிக்கும் வகையில் தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் பெரும்பான்மையின அமைப்புக்களை தூண்டிவிடும் விடயம் அம்பலமாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் ஸ்ரீலங்காவின் முப்பத்தியொரு பெரும்பான்டையின அமைப்புகள் நேற்று கொழும்பில் உள்ள ஐ.நா. பணியகத்தில் குறித்த மனுவை கையளித்துள்ளன.
குறித்த மனுவில் ஸ்ரீலங்கா தனது எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் கால அவகாசத்தை வழங்கி இடமளிக்கவேண்டும் அழுத்தங்களை பிரயோகிகக் கூடாமெனவும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்காவின் உள்ளக பிரச்சினைகளை உள்ளக ரீதியில் தீர்த்துக்கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இவ்வாறு வடக்கு கிழக்கு மலையகம் என தமிழ்பேசும் மக்களின் திரள் நிலை போராட்டம் உருவாகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சிங்கள அரசசார்பற்ற அமைப்புக்களை தூண்டிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.