கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் முன் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் குறைந்த நேரத்தை செலவிட பயங்கரவாத குழு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதால், புதிய வன்முறை தாக்குதல்களுடன் ‘செய்திகளில் இடம்பெற’ ஐ.எஸ் முயற்சிக்கும் என்று ஐ.நா பரிந்துரைத்துள்ளது.
ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏராளமான மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதால், பல பயனாளர்களை அணுக ஐ.எஸ்-க்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும்.
இந்த காலகட்டத்தில் Threats குவிந்திருக்கலாம், அவை கண்டறியப்படாமல் உள்ளன, ஆனால் சரியான நேரத்தில் வெளிப்படும் என ஐ.நா எச்சரித்துள்ளது.
துணை-சஹாரா ஆபிரிக்காவைக் குறிப்பிட்ட ஐ.நா அறிக்கை, கொரோனா வைரஸ் தொற்றுநோய், மோதல் மண்டலங்களில் பயங்கரவாத குழுக்களைத் தடுத்ததை விட அரசாங்கங்களின் நிலையை பலவீனப்படுத்தியுள்ளது.
மேலும் பொருளாதாரங்கள், அரசாங்க வளங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அபாயங்களுக்கான ஒதுக்கீடுகள் ஆகியவற்றில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை மேலும் மோசமாக்கியுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களின் போர் திறனை சீர்குலைத்துள்ள குறிப்பிடத்தக்க பின்னடைவுகளையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அல்-கொய்தா ஏராளமான முக்கிய தலைவர்களை இழந்துவிட்டதாகவும், அதே நேரத்தில் ஈராக் அல்லது சிரியாவில் ஐ.எஸ் தனது செல்வாக்கை மீட்டெடுக்க முயல்கிறது, இது உடனடியாக நடக்க வாய்ப்பில்லை என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.