கொரோனா தொற்றினால் மேலும் 8 பேர் நேற்று மரணித்துள்ளனர். இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 351ஆக உயர்ந்துள்ளது.
கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான பெண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (06) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக பிரச்சினை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதய நோய் நிலை, கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக பிரச்சினை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தங்கொட்டுவ மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (06) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட இருதய மற்றும் சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட பிரச்சினை, புற்றுநோய் நிலை மற்றும் சிக்கலான கல்லீரல் நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (04) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர நீரிழிவுடன் சிறுநீரக செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 04ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சிக்கலான சிறுநீரக நோய் காரணமான சிறுநீரக பாதிப்பு மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (06) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.