கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் கிளிநொச்சி விசேட
தேவைக்குட்பட்டோர் வலையமைப்பால் வெற்றிமனை இல்லம் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் பராமரிக்கப்படுகின்ற இல்லமாக 2009
இற்கு முன் இயங்கிய வெற்றிமனை இல்லம் தற்போது மீண்டும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள்
கைவிடப்பட்டுகின்ற அல்லது வீடுகளில் அவர்கள் முறையாக பராமரிக்க முடியாத
சூழ் நிலை காரணமாக 2009 இற்கு முன் வெற்றிமனை இல்லம் அவ்வாறான பெண்களை பொறுப்பேற்று சிறப்பாக பராமரித்து வந்தது.
இந்த நிலையில் தற்போது கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பால் வெற்றிமனை இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் கிளிநொச்சி மாவட்ட உளநல வைத்தியர் மா. ஜெயராசா, முல்லைத்தீவு சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ம. முத்துக்குமார், கரைச்சி சிறுவர் நன்நடத்தை
உத்தியோகத்தர் த. பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு இல்லத்தினை திறந்து
ஆரம்பித்து வைத்துள்ளனர்.



















