ஐ.நா மனித உரிமை முன்றலில் 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழருக்கு நீதி கோரி தீக்குளித்து மரணமடைந்த ஈகைப்பேரொளி முருகதாசன் மற்றும் தமிழர் தாயகத்தின் முக்கிய ஊடகரும் நாட்டுப் பற்றாளருமான சத்தியமூத்தி ஆகியோரின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் தனது ஆத்மார்த்த வேண்டுகோள் என்ற தலைப்பில் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்து விட்டு உலகத் தமிழ் ஜெனிவா மனித உரிமை முன்றலில் 2009 பெப்ரவரி 12ம் திகதி இரவு இரவு 8.15 தொடக்கம் 9.45 நேரத்துக்குள் முருகதாசன் தீக்குளித்து மரணித்தார்.
அதேபோல தமிழர் தாயகத்துக்காக ஊடகப்பணிசெய்த ஊடகர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்ட நாளின் 12ஆவது ஆண்டு நினைவு தினமும் இன்றாகும்.
அவருக்குரிய அஞ்சலி நிகழ்வு கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடகத்துறை தொழில்சார் ஊடகவியலாளர் சம்மேளனம் ஆகிய ஊடக அமைப்புக்களின் ஏற்பாட்டில் மட்டு. ஊடக அமையத்தில், இன்று பகல் நடத்தப்பட்டிருந்தது.
முருகதாசன், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தவர்.



















