இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 940 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதில் 278 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 261 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கண்டியில் 88 பேரும் களுத்துறையில் 79 பேரும் குருநாகலில் 51 பேரும் காலியில் 47 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இரத்தினபுரியில் 29 பேருக்கும் மாத்தறையில் 25 பேருக்கும் மாத்தளையில் 18 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கேகாலையில் 10 பேருக்கும் பொலன்னறுவையில் 7 பேருக்கும் பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்தில் தலா 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 66 ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 688 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறறுவரும் அதேவேளை 384 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.