உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்து விட முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் எவருக்கும் சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மனச்சாட்சியற்ற இந்த தாக்குதலின் பின்னணியிலிருந்த எவருக்கும் அடைக்கலம் வழங்கவோ அவர்களைத் தண்டனைகளிலிருந்து தப்பிக்கச் செய்யவோ இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் பிரகாரம் தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அதனை உதாசீனம் செய்தது ஏற்புடையதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.