நாட்டில் மேலும் 796 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 852ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 67 ஆயிரத்து 831 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான இன்னும் ஆறாயிரத்து 631 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் இதுவரை 384 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















