பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெல்மடுல்ல, பதகட பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகரிற்கு தகவல் வழக்காமல் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
கடந்த 4ஆம் திகதி நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.