நாட்டில் மேலும் 722 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 713 பேர் திவுலப்பிட்டிய – பேலியகொட கொத் தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 73ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 09 பேர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 906 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6ஆயிரத்து 321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 747 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 617 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.