யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புத் துறை, மருதடி, அரியாலை பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த முறைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுத்திருந்த விசாரணையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து 8 பவுண் தங்க நகைகளும் இலத்திரனியல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாசையூர், குருநகர் மற்றும் பொஸ்கோ ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.




















