ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் உந்துருளியில் பயணித்த தம்பதியினர் பண்டாரகம – வெல்மில்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவினரால் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின் போதே சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 750 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



















