எப்போதும் தான் அரசாங்கத்தை விட்டுச் செல்ல போவதில்லை எனவும் அரசாங்கம் தன்னை கைவிட்டு செல்லுமா என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி – நீங்கள் தொடர்ந்தும் பொறுமையாக இருப்பீர்களா?.
பதில் – ஏன் நான் பொறுமையாக இருக்கக் கூடாதா?.
கேள்வி – பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தானே உங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.
பதில் – நான் நாடாளுமன்ற உறுப்பினர் மீது குறை கூற மாட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவராவது அந்த பொறுப்பை வழங்கி இருக்கலாம். அந்த பொறுப்பை வழங்கியவரே, நாடாளுமன்ற உறுப்பினர்களை செய்வதறியாத நிலைமைக்கு தள்ளியுள்ளார்.
கேள்வி – தேசிய வளங்களை விற்பனை செய்வதற்காக எதிராக செயற்பட்டது இதற்கு காரணமா?.
பதில் – பெரும்பாலும் அதுவாக இருக்கலாம்.
கேள்வி -நீங்கள் நாட்டின் தேசிய வளங்களை பாதுகாக்க தொடர்ந்தும் குரல் கொடுக்கப்பீர்களா?.
பதில் – இதனை நான் அரசியலை ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்ந்தும் செய்து வருகிறேன்.
கேள்வி – அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க முடியுமா?.
பதில் – நான் அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டேன், அரசாங்கம் என்னை விட்டுச் செல்லுமா என்பது தெரியாது என்று பதிலளித்துள்ளார்.



















