புல்வாமா தாக்குதலுக்கு நாம் கொடுத்த பதிலடி, வலிமையான முடிவுகளை இந்தியா எடுக்கும் என்பதை நிரூபித்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சி.ஆர்.பி.எப்.இ எனப்படும், மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின், 82 வருட கால வரலாற்றை கூறும் புத்தகத்தை டெல்லியில் வெளியிட்டு வைத்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஜம்மு – காஷ்மீரில் 2019ம் ஆண்டில், புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலை, யாராலும் மறக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது.
ஆனால், வழக்கம் போல், இந்த தாக்குதலுக்கு வெறும் கண்டனம் மட்டும் தெரிவிக்காமல், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.நமது விமானப்படை, எல்லையை தாண்டி, பயங்கரவாத முகாம்களை அழித்தது.
புல்வாமா தாக்குதலுக்கு நாம் கொடுத்த பதிலடி கடினமான, வலிமையான முடிவுகளை எடுக்க இந்தியா தயங்காது என நிரூபிக்கப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.