இலங்கைக்கு ஒரேநேரத்தில் பெருந்தொகையான கொவிட் 19 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாது என தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்துக்கு அண்மையில் சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கி இருந்தார்.
எவ்வாறாயினும், 10 மில்லியன் தடுப்பூசிகளும் ஒரேநேரத்தில் கிடைக்கப்பெறாது என்று கூறப்படுகிறது.
கட்டம் கட்டமாகவே இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும்.
முதல்கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகள் அடுத்தமாத இறுதிக்குள் கிடைக்கப்பெற வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


















