பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டுநாள் விஜயமாக சற்று முன்னர் பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை பிரதமர் மகிந்த ராஜபக்ச நேரடியாக சென்று வரவேற்றார்.
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடைபெறுவதுடன் 6.30 மணிக்கு இருதரப்பு கூட்டறிக்கை வெளியிடப்படும்.
நாளையதினம் முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கவுள்ளார்.11 மணிக்கு வர்த்தக பிரதிநிதிகளுடன் சந்திப்பு இடம்பெறும்.நண்பகல் 12.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருடன் சந்திப்பு மதிய உணவும் இடம்பெறும்.
மாலை 3 மணிக்கு நாட்டிலிருந்து புறப்படுவார்.