உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை தவிர மேலும் பல அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளது.
வெளியான அறிக்கையின்படி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ், தேசிய புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் டி.ஐ.ஜி நிலந்த ஜெயவர்தன, மற்றும் கொழும்பு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி நந்தன முனசிங்க ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்குஎதிராக ஒழுக்காற்று விசாரணைக்கும் பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிடமும் தவறை கண்டபோதிலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க பரிந்துரைக்கவில்லை.