பெகோ போன்ற கனரக இயந்திங்களை பயன்படுத்தி இரத்தினக்கல் அகழ்வதால் நிலக்கீழ் நீர் கட்டமைப்பு பாதிக்கப்படும் ஆபத்துள்ளது.
ஆகவே பெகோ இயந்திரங்களைப் பயன்படுத்தி இரத்தினக்கல் அகழ்வுக்கு அனுமதிக்க முடியாது என நீர்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இவ்விடயமாக நேற்று ஊடகங்களுக்குத் தகவல் வழங்குகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அனைவரினதும் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதும் சுத்தமான குடிநீரை வழங்குவதும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
குடி நீர் மனிதனின் பிரதான நீராகாரமாகும் . எனவே இதற்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளை அரசு அங்கீகரிக்காது.
இரத்தினக்கல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றாலும் பெறாவிட்டாலும் பெகோ இயந்திரம் மூலம் இரத்தினக்கல் அகழ்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
இவ்விடயத்தில் நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறோம்.. இவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெறும் போது பொதுமக்களிடமிருந்தும் சுற்றாடல் நலன்விரும்பிகளிடமிருந்தும் பரவலான முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
அத்துடன் பெகோ போன்ற கனரக இயந்திங்களை பயன்படுத்தி இரத்தினக்கல் அகழ்வதால் நிலக்கீழ் நீர் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது.எனவே சட்டத்தை மீறி எவரும் செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.