கொழும்பு, நாரஹென்பிட்டியில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் போது குழப்ப நிலை ஒன்று ஏறபட்டுள்ளது.
நேற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தடுப்பூசி வழங்கப்படவிருந்த எண்ணிக்கையை விடவும் அதிகமானோர் தடுப்பூசி பெறுவதற்கு அவ்விடத்திற்கு வந்தமையினால் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக மக்கள் காலை 6 மணிமுதல் அவ்விடத்திற்கு வந்து வரிசையில் நின்றுள்ளனர். 9 மணிக்கு அவ்விடத்திற்கு வந்த சுகாதார வைத்திய அதிகாரிகள் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அவ்விடத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்று கூடிய நிலையில் அவர் சுகாதார சட்டத்திட்டங்களை மீறி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர்.
எனினும் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களை தடுப்பூசி பெற வருமாறு கூறிய போதிலும் தடுப்பூசி வழங்கப்படவில்லை என அங்கு வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கூட்டம் அதிகம் காரணமாக சுகாதார அதிகாரிகள் மற்றும் மக்கள் கடுமையான நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.