வடமாகாணத்தில் மேலும் 2 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 451 பேரின் பிசிஆர் பரிசோதனையில் இவ்வாறு 2 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 93 ஆயிரத்து 469 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்றைய தினம் மாத்திரம் 14 ஆயிரத்து 866 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.



















