நாட்டிற்கு திரும்ப எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் பணிபுரியும் ஏராளமான இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாது பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
அதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதுவரை வெளிநாட்டில் பணிபுரியும் 32,000 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 22,483 பேர் தாய்நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















