தனது சரும அழகை மெருகூட்ட ஊசி ஏற்றிக் கொள்ள சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொழும்பு 5 திம்பிரிகஸ்யாய பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் அவர் முற்படுத்தப்பட்டார். நாரஹேன்பிட்டியை சேர்ந்த 26 வயதான யுவதியே இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.
ஜனவரி 15 பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளித்துள்ள யுவதி, சரும அழகை மெருகூட்டும் ஊசியை ஏற்றுவதற்காக வைத்தியரிடம் சென்றுள்ளார். இதன்போது ஊசியின் விலை தொடர்பில் விசாரித்த போது, அது 10,000 ரூபா தொடக்கம் 35,000 ரூபா வரை உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
ஊசியின் விலையை குறைப்பது பற்றி வைத்தியருக்கும் யுவதிக்குமிடையில் தொடர்ந்து பேச்சு நடந்துள்ளது. இதன்போது, இருவருக்குமிடையில் தொலைபேசியில் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, குறைந்த விலையில் ஊசியை செலுத்துவதாக தெரிவித்த வைத்தியர், யுவதியை வீட்டுக்கு அழைத்துள்ளார். வீட்டில் வைத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் 2,000 ரூபா கொடுத்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், சுமார் 15 தடவைகள் வைத்தியர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், 5 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சந்தர்ப்பங்களில் 10 இலட்சம் ரூபாவை தனக்கு தந்துள்ளதாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார். தன்னை துஷ்பிரயோகம் செய்த காட்சிகள், சிசரிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும், அவை தவறான வழியில் பயன்படுத்தப்படும் அபாயமுள்ளதால் யுவதி முறைப்பாடு செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார். வைத்தியரை 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் நீதிமன்றம் விடுவித்தது