ஆளும் தரப்புக்குள் இருந்து கொண்டு பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மாற்ற வேண்டுமென தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்குள் இருக்கும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷவை சந்தித்து மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.
அலரிமாளிகையில் இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கொண்டுசெல்வதை பஸில் ராஜபக்ஷ, பின்வரிசை உறுப்பினர்களிடம் உறுதிசெய்ததாக அலரிமாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
மேற்படி சந்திப்பில் 40ற்கும் மேற்பட்ட மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.