முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யலாமெனத் தெரிவித்த உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் யோசனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி ஊடாக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.