தமிழகத்தில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்திற்கு மறுத்துள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்துள்ளார்.
இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பகுதியை சேர்ந்த நர்சிங் பயிற்சி முடித்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் திருமணம் நேற்று காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் உறவினர்கள், இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கான பணிகளில் தீவிரமாக இருந்தனர்.
மணமகளுக்கு அலங்காரம் செய்ய சென்றபோது நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று கூறி திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
இதைக்கேட்டு இருவீட்டாரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணப்பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் மணமகள் விடாப்பிடியாக திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
இதனால் மணமகனின் பெற்றோர், உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி அறியாத உறவினர்கள் சிலர் திருமணத்திற்காக மண்டபத்துக்கு வந்துள்ளனர். அப்போது திருமணம் நின்றது குறித்து தெரிந்த உடன் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மணப்பெண்ணின் இந்த திடீர் முடிவுக்கு படிப்புதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பது தெரியாத நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.