பாரீஸில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, மூன்று வார பொதுமுடக்க திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தற்போது அமுலிலிருக்கும் மாலை ஆறு மணி முதலான ஊரடங்கு ஒரு பாதி நடவடிக்கை என்றும், அதனால் மோசமான விளைவுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் மேயர் வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆகவே, பாரீஸ் மேயரின் உதவியாளரான Emmanuel Grégoire புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கொரோனா நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில், பாரீஸ் மற்றும் நாட்டின் வடக்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில், மார்ச் 6ஆம் திகதி முதல், வார இறுதி பொதுமுடக்கம் முதலான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
பாரீஸைப் பொருத்தவரை வார இறுதி பொதுமுடக்கத்தைத் தாண்டி ஒரு படி மேலே போய், மூன்று வார முழு பொதுமுடக்கத்தை அங்கு அறிவிப்பது என திட்டமிடப்பட்டுள்ளதாக Gregoire தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த திட்டம் அரசின் முன் வைக்கப்பட்டு, அரசு அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.