வெறும் 2 நாட்களில் ஆட்டம் முடிந்ததால் அகமதாபாத்தில் உள்ள ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்ததல்ல என்று இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-1 என தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது.
இந்திய அணி வெற்றிக்கு பின் யுவராஜ் சிங் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இரண்டே நாட்களில் போட்டி முடிந்தது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
இது போன்ற ஆடுகளத்தில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் பந்து வீசியிருந்தால் அவர்கள் 1000, 800 விக்கெட்டுகள் எடுத்திருப்பார்கள்.
எப்படியிருந்தாலும் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் மற்றும் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் என யுவராஜ் பதிவிட்டுள்ளார்.
எனினும், அகமதாபாத் ஆடுகளத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, வீரர்கள் தான் சரியாக தவறு செய்தனர் என போட்டிக்கு பின் அளித்த பேட்டியின் போது இந்திய வீரர் ரோகித் சர்மா கூறினார்.
https://twitter.com/YUVSTRONG12/status/1364946671113764884