பொதுவா நம்மில் சிலர் உணவு வீணாகக் கூடாது என்பதற்காக பல நாட்கள் எஞ்சிய உணவுகள் பிரிட்ஜில் வைத்து சூடு செய்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் மீண்டும் மீண்டும் சில உணவுகளை சூடு செய்து சாப்பிடுவதால், அது உங்கள் உணவை நச்சுத் தன்மையுடையதாக மாற்றலாம்.
மேலும் இது உடலுக்கு பல்வேறு தீங்கை விளைவிக்கின்றது. அந்தவகையில் இப்படி மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
- ஒருமுறை சமைத்த அரிசியை மீண்டும் சூடாக்க கூடாது. மீண்டும் சூடாக்கப்பட்ட அரிசி உணவை உண்பதால் நமக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
- ஒருமுறை சமைத்த முட்டையை நீங்கள் மீண்டும் சூடாக்க நினைக்கும் பொழுது, அது நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது. துருவிய முட்டைகள் அல்லது வேகவைத்த முட்டைகளை மீண்டும் சூடு செய்து உண்பதை தவிர்த்து விடுங்கள்.
- சமைத்து ஏற்கனவ வைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடாக்கும் போது, அது உருளைக்கிழங்கில் உள்ள நன்மையை இழக்கிறது. அதாவது உருளைக்கிழங்கில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து, அதை நச்சுத்தன்மை உடையதாக மாற்றுகிறது. மீண்டும் சூடுபடுத்தப்பட்ட உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அது குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
- கோழி உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ண கூடாது. முட்டைகளைப் போலவே கோழியிலும் அதிகமான புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன. மீண்டும் மீண்டும் சூடாக்கி இந்த கோழியினால் சமைக்கப்பட்ட உணவை உண்ணும்போது, அவை இயற்கையாகவே அந்த கறியில் உள்ள ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. இதுபோன்று சிக்கன் உணவை சூடு செய்து சாப்பிடும்போது அவை செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
- முன்பு சமைத்து வைத்த இந்த காளான்களை மீண்டும் சூடு செய்து நாம் சாப்பிடும்போது, இந்த காளானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து, இந்த உணவில் நச்சுத் தன்மையை ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் சூடு படுத்தப்பட்டு சாப்பிடப்படும் காளான் உணவுகள் பெரிதளவில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.
- கீரைகளை மீண்டும் மீண்டும் சூடாக்கும் போது, சமைக்கப்பட்ட அந்த கீரைகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது தீங்கினை விளைவிக்கும். கீரைகளில் அதிகமாக இரும்பு மற்றும் நைட்ரேட் சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த உணவு மீண்டும் சூடு படுத்தி உண்ணப்படும் போது, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட இது காரணமாகின்றது.