பிரித்தானியாவில் அடுத்த கட்டமாக கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும் என்ற விவரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக வயது வரம்புகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
அடுத்ததாக 40-49 வயதுடையவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறுகிய காலத்தில் மிகப் பெரிய நன்மையை வழங்கும் என்று விஞ்ஞான ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்ற குழுக்களுக்கு அடுத்ததாக தடுப்பூசி போட வேண்டுமா என்பதை பரிசீலித்து வருவதாக தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு (ஜே.சி.வி.ஐ) தெரிவித்துள்ளது.
ஆனால் இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் சேருவதைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி வயதுக்கு ஏற்ப மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே என குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் தொழில் அடிப்படையில் தடுப்பூசி வழங்குவது மிகவும் சிக்கலானதாக இருக்கும், மேலும் தடுப்பூசி திட்டத்தை மெதுவாக்கலாம், இதனால் சில பாதிக்கப்படக்கூடிய நபர்கள் நீண்ட காலத்திற்கு அதிக ஆபத்தில் விடுகிறது என தெரிவித்துள்ளது.
முதற்கட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவுடன், இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் குழுக்கள், 40-49 வயதுடையவர்கள் அனைவருக்கும். 30-39 வயதுடையவர்கள் அனைவருக்கும்.18-29 வயதுடையவர்கள் அனைவருக்கும்.