ரணில் ,சஜித் போன்ற தலைமைகளால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (26)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
எனது அரசியல் பயணத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முப்பது வருடங்கள் பயணித்திருக்கிறேன்.
ரணில் ,சஜித் போன்ற தலைமைகளால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். சிறுபான்மை கட்சிகளின் இணைவு சமகி என்கின்ற கட்சியோடு கடந்த காலங்களில் செயல்பட்டாலும் அவர்களால் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றார்.



















