பிரித்தானியாவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மருந்தாளருக்கு கறுப்புச் சந்தையில் நூறாயிரக்கணக்கான டோஸ் போதை மருந்து மருந்துகளை விற்பனை செய்ததற்காக 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
West Bromwich-ல் உள்ள high street-ல் உள்ள தனது தாயின் Khaira மருந்தகத்தில் பணிபுரிந்த Balkeet Singh Khaira-வுக்கு செவ்வாய்க்கிழமை Birmingham Crown நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.
36 வயதான Balkeet Singh தடைசெய்யப்பட்ட மருந்துகளை 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் அதிக லாபத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு விற்றுள்ளார். கறுப்புச் சந்தையில் விற்கப்பட்ட அந்த மாத்திரைகளின் மதிப்பு 1 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“கட்டுப்படுத்தப்பட்ட, உரிமம் பெறாத அல்லது பரிந்துரைக்கப்பட்ட (prescription-only medicines) மருந்துகளை இந்த வழியில் விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும்” என்று இந்த வழக்கை வழிநடத்திய பிரித்தானியாவின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (MRAH) அமலாக்க அதிகாரி Grant Powell கூறினார்.
கடந்த மாதம் Birmingham Crown நீதிமன்றத்தில் இந்த வழக்கில் Balkeet Singh குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த வாரம் தண்டனை வந்தது.
அதே மருந்தகத்தில் அவரது தாயார் பணிபுரிந்தார், ஆனால் அவர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என கூறப்பட்டுள்ளது.