நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 485 பேர் இன்று குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின், நாளாந்த கொவிட்-19 நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுளளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 321 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக குறைவடைந்துள்ளது.