பதுளை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையில் பணி புரியும் 2 வைத்தியர்கள், 3 சுகாதார ஊழியர்கள் மற்றும் 29 நோயாளர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 70 வயதுடைய ஒருவர், பதுளை வைத்தியசாலையில் உயிரிழந்ததுடன், அவர் பதுளை பொது மயானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தகனம் செய்யப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பதுளை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், ஏனைய பிரிவுகளில் வைத்திய நடவடிக்கைகள் வழமைப்போன்று இடம்பெற்று வருவதாக நிர்வாகப்பிரிவு கூறியுள்ளது.